Thursday, December 9, 2010

சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு


லண்டன்,நவ.21:சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்வில் தெரியவருகிறது,


இதற்காக டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது.

ஏனெனில், மாதுளம் பழச்சாறு அருந்தியவர்கள் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டதாக உணர்ந்தனர். இருப்பினும், இந்த சோதனையை இன்னும் பலரிடம் செய்துபார்ப்பது நல்லது என வெஸ்டன் கலிலி மருத்துவமனையில் இந்த ஆய்வை நடத்திய தலைமை மருத்துவ நிபுணர் பட்யா கிறிஸ்டல் தெரிவித்தார்.

இந்த செய்தியை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.

புராஸ்ட்ரேட் புற்று நோயை மாதுளம் பழம் குறைக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது நினைவுகூறத்தக்கது.

Friday, November 19, 2010

மாதுளம்மருத்துவச் சிறப்பு


மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.


ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம்.

மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து 78 விழுக்காடு உள்ளது. புரதச்சத்து 1.6 விழுக்காடும், நார்ச்சத்து 5 விழுக்காடும், கார்போ ஹைட்ரேட் 14.5 விழுக்காடும், தாதுக்கள் 0.7 விழுக்காடும், சுண்ணாம்புச் சத்து 10 விழுக்காடும், மக்னீஷியம் 12 விழுக்காடும் அடங்கியுள்ளன.

இதுதவிர, சிலிக் திராவகம் 14 மில்லி கராம், கந்தகம் 12 விழுக்காடு, குளோரின் 20 விழுக்காடு, தயாமின் 0.46 விழுக்காடு, பாஸ்பரம் 1.33 விழுக்காடு, செம்பு 0.2 விழுக்காடு, நிக்கோடினிக் அமிலம் 0.30 விழுக்காடும் உள்ளன.

மேலும், வைட்டமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்துமே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.

மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாமாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பல பிணிகளும் அகலும்.

மாதுளம் பழ ரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும். இதுதவிர, காதடைப்பு, வெப்பக் காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழ ரசம் விலக்கும்.
மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.

அன்றாடம் பாதி மாதுளம் பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கி, நன்றாக மலம் இளகி இறங்கும்.

மாதுளம் பழச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமரும் குணமாகும்.

மாதுளம் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும்.


இதுதவிர, மேலே குறிப்பிட்டதுபோல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

Friday, October 8, 2010

தூ‌க்க‌ம்

தூ‌க்க‌ம் எ‌ன்பது இரவானது‌ம் நமது உட‌ல் இளை‌ப்பாற‌க் ‌கிடை‌‌த்த ‌விஷய‌ம் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் எ‌‌ண்‌ணி‌‌க் கொ‌ண்டி‌ரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், தூ‌க்க‌த்‌தி‌ற்கு எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ள் உ‌ள்ளன.







தூ‌க்க‌ம் எ‌ன்பது ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் அமையு‌ம். ஒரு ‌சில‌ர் படு‌த்தது‌ம் தூ‌ங்‌கி ‌விடுவ‌ர். ‌சில‌ர் ம‌ணி 12ஐ தா‌ண்டினா‌ல் தா‌ன் தூ‌ங்கவே செ‌ல்வ‌ர். ‌சில‌ர் புர‌ண்டு புர‌ண்டு படு‌த்து தூ‌க்க‌த்துட‌ன் போராடி கடை‌சியாக தூ‌ங்குவ‌ர். தூ‌ங்குவ‌திலு‌ம் பல வகைக‌ள் உ‌ண்டு. ஆ‌ழ்‌ந்த உற‌க்க‌ம், லேசான உ‌ற‌க்க‌ம் போல பல உ‌ண்டு.





பொதுவாக கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌மே ‌சிற‌ந்த தூ‌க்கமாகு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாம‌ல் தூ‌ங்‌கி எழு‌ந்தா‌ல்தா‌ன் உ‌ண்மை‌யி‌ல் ஆ‌ழ்‌ந்த தூ‌க்க‌த்தை தூ‌ங்‌கி‌னீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ப்படு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌த்தை‌க் கான சுவாச‌ம் ‌சீராக இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌சீரான சுவாச‌ம் இரு‌ப்‌பி‌ன் ந‌ல்ல தூ‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். சுவாச‌த்‌தி‌ல் ‌சிதைவு ஏ‌ற்ப‌ட்டா‌ல் தூ‌க்க‌‌த்‌திலேயே மன‌ம் அ‌திக‌ம் வேலை செ‌ய்ய ஆர‌ம்‌பி‌த்து ‌விடு‌ம். மன‌ம் வேலை செ‌ய்வதுதா‌ன் கனவுக‌ளி‌ன் அடி‌ப்படையே.



ச‌ரி தூ‌க்க‌த்‌தி‌ல் சுவாச‌த் தடை ஏ‌ற்பட‌ எ‌ன்‌ன‌க் காரண‌ம் இரு‌க்கு‌ம். நமது உணவு முறைதா‌ன். தூக்க‌த்தை‌க் கெடு‌க்கு‌ம் பல உணவுக‌ள் உ‌ள்ளன. தூ‌க்க‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் உணவுகளு‌ம் உ‌ள்ளன. அவ‌ற்றை‌த் தே‌ர்வு செ‌ய்து அளவோடு உ‌ண்பதுதா‌ன் தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான ‌சீரான சுவாச‌த்தை அ‌ளி‌க்கு‌ம்.



இர‌வி‌ல் சா‌ப்‌பிடு‌‌ம் உணவானது அளவு குறைவான உணவாகவு‌ம், கார‌மி‌ல்லாத, வாயு சே‌ர்‌க்காத உணவாகவு‌ம் இரு‌ப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.



உட‌ல் சு‌த்தமு‌ம், ந‌ல்ல கா‌ற்றோ‌ட்டமு‌ம் கூட தூ‌க்க‌த்‌தி‌ற்கு அடி‌ப்படையாகு‌ம். உற‌‌ங்க‌ப் போகு‌ம் மு‌ன் முக‌ம், கை கா‌ல்களை சு‌த்த‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்வது‌ம், நா‌ம் படு‌க்கு‌ம் இட‌ம் சு‌த்தமாகவு‌ம், கா‌ற்றோ‌ட்டமாகவு‌ம் இரு‌க்கு‌ம்படியு‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.



சா‌ப்‌பி‌ட்டவுட‌ன் களை‌ப்போடு செ‌ன்று படு‌க்கை‌யி‌ல் ‌விழுவது, சோ‌ம்பலையு‌ம், கெ‌ட்ட கனவுகளையு‌ம் அ‌ளி‌க்கு‌ம். பக‌ல் தூ‌க்க‌ம் ‌நி‌ச்சயமாக இரவு‌த் தூ‌க்க‌த்தை‌க் கெடு‌க்கு‌ம். சா‌ப்‌பி‌ட்டு இர‌ண்டு ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு படு‌க்க‌ச் செ‌ன்றா‌ல் ‌நி‌ச்சயமாக ந‌ல்ல தூ‌க்க‌ம் வரு‌ம்.





தூ‌க்க‌ம் உடலு‌க்கு மட‌்டும‌ல்ல, மன‌த்‌தி‌ற்கு‌ம் ஓ‌ய்வ‌ளி‌க்‌கிறது. அதே போல தூ‌ங்காத ம‌னித‌ர்க‌ளி‌ன் மனமு‌ம் சோ‌ர்வடைவதை காணலா‌ம். ச‌ரியான தூ‌க்க‌ம் இ‌ல்லையே எ‌ன்ற எ‌ண்ணமே, மன‌தி‌ற்கு‌ள் கோபமாகவு‌ம், துக்கமாகவு‌ம் மாற‌க் கூடு‌ம். இதனா‌ல் தேவைய‌ற்ற ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படலா‌ம்.



ந‌ல்ல ‌சீரான தூ‌க்க‌ம் மனதை ஆன‌ந்தமான ‌நில‌ை‌யி‌ல் வை‌த்‌திரு‌க்க உதவு‌ம். மனமே நமது அ‌ன்றாட கா‌ரிய‌ங்களு‌க்கு உறுதுணையாக இரு‌க்கு‌ம். மன‌ம் ஆன‌ந்தமாக இரு‌ந்தா‌ல் நமது வேலையு‌ம் ‌திரு‌ப்‌தியாக இரு‌க்கு‌ம்.





தூ‌க்க‌ம் வராத ‌நிலை‌யி‌ல் ‌புர‌ண்டு புர‌ண்டு படு‌ப்பதை ‌விட, உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்த ஏதேனு‌ம் ஒ‌ன்றை செ‌ய்து பாரு‌ங்க‌ள். ‌‌மன‌ம் உ‌ற்சாக‌ம் அடைவதா‌ல் வராத தூ‌க்கமு‌ம் ‌விரை‌வி‌ல் வ‌ந்து சேரு‌ம். ‌பிடி‌த்த வேலை எ‌ன்றா‌ல் பா‌ட்டு கே‌ட்பது, பு‌த்தக‌ம் படி‌ப்பது போ‌ன்றவை. தொலை‌க்கா‌ட்‌சி பா‌ர்‌ப்பதா‌ல் பலரது தூ‌க்க‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.



தூ‌க்க‌ம் கெ‌ட்டு எ‌ந்த‌ப் ப‌ணியை செ‌ய்தாலு‌ம் அது வெ‌ற்‌றிகரமாக முடியாது. எனவே, தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான ‌விஷய‌ங்களை நா‌ம் ச‌ரியான முறை‌யி‌ல் ‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டு‌ம்.

Friday, September 10, 2010

ம‌னித உடலு‌க்கு‌த் தேவையான

கா‌ய்க‌றிக‌ளிலு‌ம், ‌கீரை வகைகள‌ிலு‌ம் ம‌னித உடலு‌க்கு‌த் தேவையான ஏராளமான ச‌த்து‌க்க‌ள் அட‌ங்‌கி‌யிரு‌ப்பது அனைவரு‌ம் அ‌றி‌ந்ததே. அதனா‌ல்தா‌ன் எ‌ந்த மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்றாலு‌ம், அ‌திகமாக கா‌ய்க‌றியு‌ம், ‌கீரையு‌ம் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர்க‌ள்.




எ‌ந்த எ‌ந்த கா‌ய்க‌றிக‌ளி‌ல் எ‌ன்னெ‌ன்ன ச‌த்து‌க்க‌ள் அட‌ங்‌கி‌யிரு‌க்‌கி‌ன்றன, அ‌தி‌ல் எ‌ன்ன மு‌க்‌கிய‌த்துவ‌ம் எ‌ன்பதை இ‌ங்கு பா‌ர்‌க்கலா‌ம்.



நா‌ம் கா‌ய்க‌றி கடை‌யி‌ல் சாதாரணமாக வா‌ங்கு‌ம் வெ‌ண்டை‌க்கா‌ய் ‌மிக‌ச் ‌சிற‌ந்த மரு‌த்துவ‌ப் பொரு‌ள் எ‌ன்பது பலரு‌‌‌ம் அற‌வி‌தி‌ல்லை. அதாவது வெ‌ண்ணடை‌க்கா‌ய் குளிர்ச்சியான தன்மை கொண்டது. வெ‌ண்டை‌க்காயை சமை‌க்காமலு‌ம் சா‌ப்‌பிடலா‌ம். வெ‌ண்டை‌க்கா‌யி‌ல் ‌பி ம‌ற்று‌ம் ‌சி ‌ச‌த்து‌க்களு‌ம், உ‌யி‌ர்‌ச்ச‌த்து‌க்களு‌ம் இரு‌க்‌கி‌ன்றன.





WDஇதனை சமை‌க்கு‌ம் போது சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். உட‌‌ல் சூ‌ட்டா‌ல் அவ‌தி‌ப்படுபவ‌ர்களு‌க்கு வெ‌ண்டை‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாகு‌ம். உஷ்ண இருமலைக் குணமாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் ம‌ட்டு‌ம் வெ‌ண்டை‌க்காயை குறைவாக உ‌‌ண்பது ந‌ல்லது.





WDகத்தரிக்காய் : இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றுதான். சுவை‌யி‌ல் ம‌ட்டுமே க‌த்‌தி‌ரி‌க்கா‌யி‌ல் மா‌ற்ற‌ம் உ‌ண்டு. பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் பிரச்சினைகள் விலகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இந்த காயைப் பயன்படுத்து‌கிறா‌ர்க‌ள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களு‌க்கு க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் ந‌ல்லது. ‌அம்மை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கு‌ம் ஆ‌ற்றலு‌ம் க‌த்‌தி‌ரி‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு.



முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். அ‌தி‌ல்லாம‌ல் ஏ‌ற்கனவே சரும ‌வியா‌தி இரு‌ப்பவ‌ர்க‌ள் க‌த்‌தி‌ரி‌க்காயை உ‌ண்பதா‌ல் ‌வியா‌தி அ‌திக‌ரி‌க்கு‌ம். நமை‌ச்ச‌ல் உ‌ண்டாகு‌ம்.



மு‌‌ள்ள‌ங்‌கி : வே‌ர்‌ப்பகு‌தி‌யி‌‌ல் உருவாகு‌ம் கா‌ய் மு‌ள்ள‌ங்‌கியாகு‌ம். மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் ஏ ச‌த்து அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் க‌ண் பா‌ர்வை‌க்கு அ‌திக‌ம் உதவு‌கிறது. இ‌தி‌ல் சோடிய‌ம் ம‌ற்று‌ம் குளோ‌ரி‌ன் இரு‌ப்பதா‌ல் மல‌ச்‌சி‌க்கலை குண‌ப்படு‌த்து‌ம். வ‌யி‌ற்று எ‌ரி‌ச்ச‌ல், பு‌ளியே‌ப்ப‌ம் போ‌ன்ற உபாதைக‌ள் வராம‌ல் தடு‌‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் மு‌ள்ள‌ங்‌கி‌க்கு உ‌ண்டு. ‌தீ‌ப்பு‌‌ண்களு‌க்கு‌ம் மு‌ள்ள‌ங்‌கி‌ச் சாறு மரு‌ந்தாக‌ப் பய‌ன்படு‌ம். மேலு‌ம் மு‌‌ள்ள‌ங்‌கி‌யி‌‌ல் கா‌ல்‌ஷ‌ிய‌ம், மா‌ங்க‌னீ‌ஸ் கல‌‌ந்து‌ள்ளதா‌ல் பெ‌ண்களு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது. அடி‌க்கடி கரு‌ச்‌சிதைவு ஏ‌ற்படுபவ‌ர்க‌ள், மு‌ள்ள‌ங்‌கி‌ச் சா‌ற்‌றி‌ல் க‌ற்‌க‌ண்டு கல‌ந்து குடி‌த்து வ‌ந்தா‌ல் கரு ‌நிலை‌க்கு‌ம்.



அவரைக்காய் : கொடி‌யி‌ல் கா‌ய்‌க்‌கு‌ம் கா‌யி‌ல் அவரை‌க்கா‌ய்‌க்கு முத‌லிட‌ம் உ‌ண்டு. இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.



புடலங்காய் : நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. மே‌லு‌ம், உடலு‌க்கு அ‌திக கு‌ளி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்து‌ம். சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது. தொடர்ந்து இதை உண்டு வந்தால் காமத்தன்மை பெருகும்.



‌பீ‌ட்ரூ‌ட் : ‌பீ‌ட்ரூ‌ட் எ‌ன்றது‌ம் எ‌ல்லோருமே சொ‌ல்‌லி‌விடுவா‌ர்க‌ள், இது ர‌த்த ‌விரு‌த்‌தி‌க்கு உதவு‌ம் எ‌ன்று, அது ம‌ட்டும‌ல்ல ‌பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாது உ‌ப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.





webdunia photoWDகொத்தவரக்காய் : இது சிறுநீரைப் பெருக்கும். தேக சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.



சுரைக்காய் : இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். இதன் விதைகள் வீரிய விருத்தியை ஏற்படுத்தும்.

Tuesday, August 31, 2010

மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை

மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


•மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.
•வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.

•மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.
•மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.
•மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

•மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்

Monday, August 16, 2010

குணப்படுத்த உதவும் பப்பாளி

கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. முக்கியமாக அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும்.


பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது. இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளிப் பழம் மிகச் சிறந்த உணவாகும்.



பப்பாளிப் பழம் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய்களை நெகிழக் கூடியவையாக ஆக்குவதால், இதய நோயாளிகள் பப்பாளிப் பழத்தைத் தவறாமல் கண்டிப்பாக அவர்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.



காலை உணவாக பப்பாளிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது.



தயாரிப்பது எப்படி?



நிழலில் உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊற விடவும். பின்னர் வடிகட்டி அந்த கஷாயத்தை நோயாளிகளுக்குக் குடிக்க கொடுக்கவும்.



இந்த சிகிச்சையினால் நோயாளியின் உடல் வெப்ப நிலை தணியும். நாடித் துடிப்பின் வேகமும் குறையும்.

Saturday, July 17, 2010

மாரடைப்பின் அறிகுறிகள்


நெஞ்சு வலி என்றால் பயப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஏனெனில் எந்த நெஞ்சுவலியானாலும் அதனை மாரடைப்பு என்றே பலரும் கருதுகிறார்கள்.




இதயத்தின் அறைகளுக்குள் எந்த நேரமும் இரத்தம் நிறைந்திருக்கிறது ஆனாலும் அதனை இயக்கும் தசைநார்களுக்கு அந்த இரத்தம் நேரடியாகக் கிடைப்பதில்லை.



இரண்டு சிறிய இரத்தக் குழாய்கள் - கொரனரி நாடிகள் (Coronary arteries) மூலமே கிடைக்கின்றன. இவை முடியுரு நாடிகள் எனப்படுகின்றன.











இவற்றில் ஒன்றில் அல்லது அவற்றின் கிளைகளில் இரத்தம் செல்வது தடைப்பட்டால் அப் பகுதியில் உள்ள இருதயத்தின் தசை நார்களுக்கு இரத்தம் போதிய அளவு கிடைக்காது.



அந்நிலையில் தசை நார்களுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது போய்விடும்.

இது நெஞ்சுவலியாக வெளிப்படும்.



அல்லது தசை நார்களுக்கு இரத்த ஓட்டம் அடியோடு தடைப்படலாம்.



அந் நிலையில் இப்பகுதியிலுள்ள தசைகள் இறந்துவிடவும் கூடும்.



இதுதான் Myocardial Infarction) எனப்படுகிறது. இதயத் தாக்குகை எனவும் சொல்லலாம். ஆனால் மாரடைப்பைத் தவிர வேறு காரணங்களாலும் நெஞ்சுவலி ஏற்படுகிறது.



மாரடைப்பின் அறிகுறிகள்





கடுமையான வலி திடீரென உங்கள் மார்பில் ஏற்பட்டால் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம்.





நெஞ்சை இறுக்குவதுபோல

அமுக்குவது போல,

பிழிவதுபோல,

அல்லது பாரம் ஏற்றியது போல இருந்தால் அது மாரடைப்பாக இருக்கலாம்.



வலியானது பொறுக்க முடியாத கடுமையானதாக இருக்கும்.

இவ்வலி பெரும்பாலும் 20 நிமிடங்கள் அல்லது அதற்கு அதிகமாக நீடிக்கும்.

இவ்வலி பெரும்பாலும் நடுமார்பின் உட்புறத்தே ஏற்படும்.

வலி அவ்விடத்தில் மட்டும் மட்டுப்பட்டு நிற்காமல்

இடது தோள்மூட்டு,

இடதுகை, தொண்டை,

கழுத்து,

நாடி,

முதுகு போன்ற இடங்களுக்கும் பரவக் கூடும்.





வலி ஏற்பட்டபோது செய்து கொண்டிருந்த கடுமையான வேலையை நிறுத்தினாலோ ஓய்வு எடுத்தாலோ கூட மாரடைப்பின் வலி தணியாது.

வலியுடன் கடும் வியர்வை, மயக்கம், களைப்பு, இளைப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.

வலி இல்லாமல் கூட ஒரு சிலருக்கு மாரடைப்பு வருவதுண்டு.

நெஞ்சுவலிக்கு வேறு காரணங்கள்



நெஞ்சு வலி ஏற்படுவதற்கு எமது நெஞ்சறையில் உள்ள இருதயம் மட்டுமின்றி, அதிலிருந்து வரும் நாளங்கள், நுரையீரல், களம் போன்ற உறுப்புகளும் காரணமாகலாம்.

அத்துடன் நெஞ்சுச் சுவரில் உள்ள தசைநார்கள், சவ்வுகள், எலும்புகளிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம்.

நெஞ்சுக்குக் கீழே உள்ள வயிற்றறையில் உள்ள இரைப்பை, ஈரல் போன்றவற்றிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம்.

பரிசோதனைகள்





நெஞ்சுவலிக் காரணம் மாரடைப்பா அல்லது வேறு காரணமா என்பதை சில தருணங்களில் மருத்துவர்களால் கூட கண்டறிய முடியாது. நிச்சமாகக் கண்டறிய ஈசீஜி (ECG) பரிசோதனை உதவும்.

ஆனால் ஈசீஜியில் தெளிவாகத் தெரிய முன்னரே இருதய நொதியங்களைப் பரிசோதிக்கும் இரத்தப் பரிசோதனைகள் உதவும்.



காரணம் எதுவானாலும் உங்களால் தீர்மானிக்க முடியாது.

மருத்துவ ஆலோசனை பெறுவதே ஒரே வழி.



இதய நோய்களுக்கு வாய்ப்பளிக்கும் காரணிகள்



இருதய நோய்கள் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் சில மனிதர்களால் கட்டுப்படுத்தக் கூடியவை. ஏனையவை கட்டுப்படுத்த முடியாதவை.



1.கட்டுப்படுத்தக் கூடிய காரணிகள்



உயர் இரத்தஅழுத்தம்,

நீரிழிவு,

புகைத்தல்,

இரத்தத்தில் அதிக கொழுப்பு (கொலஸ்டரோல்),

தவறான உணவு முறைகள்,

அதீத உடற் பருமன்,

மதுபானம்,

உடலுழைப்பின்மை

ஆகியவற்றைக் கூறலாம். இவை யாவும் உங்களால் கட்டுப்படுத்த அல்லது மாற்றக் கூடியவையாகும்.



2. கட்டுப்படுத்த முடியாத காரணிகள்



வயது அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமாகும்.

ஆனால் மாதவிடாய் முற்றாக நின்ற பின் அவர்களுக்கும் அதிகரிக்கும்.

பரம்பரை அம்சங்களும் காரணமாகலாம்.

இவை மட்டுமே .



எனவே மாரடைப்பு வராமல் தடுப்பது பெருமளவு உங்கள் கைகளிலேயே தங்கியிருக்கிறது.



மாரடைப்பு தொடர்பான எனது ஏனைய கட்டுரைகளுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்



மாரடைப்பும் பெண்களும்

ஈ.சி.ஜி.பரிசோதனை தேவையா?

மனப்பதற்றமும் மாரடைப்பும்

Thursday, July 8, 2010

அதிசிய மீன்

பிரித்தானியாவின் Dagenham, Essex பகுதியில் மனித முகத்துடன் கூடிய மீன் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சோகத்துடன் காணப்படும் மனிதன் ஒருவனின் முகம் போல் அதன் முகம் இருக்கின்றது.


44 வயதுடைய விவசாயி ஒருவர் இந்த மீனை சுமார் 05 மாதங்களுக்கு முன் வளர்ப்பதற்காக வாங்கியபோது அதன் தோற்றம் சாதாரணமாகத்தான் இருந்திருக்கிறது.



ஆனால் அண்மைய வாரங்களில் அதன் முகம் மனித முகம் போல் மாறி உள்ளது.வாய், மூக்கு, கண் என்று மனித உறுப்புகள் அதில் வளர்ச்சி கண்டுள்ளன.



இந்த அதிசய மீனை 40,000 அமெரிக்க டொலர் வரை விலை கொடுத்து வாங்க ஆர்வலர்கள் தயாராக உள்ளனர்.

Tuesday, June 29, 2010

சர்க்கர நோய்

சர்க்கர நோய் உடலில் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புக்களில் தசை நார் பாதிப்பும் ஒன்று.







பொதுவாக நாம் உண்ணும் உணவு சக்தியாக உபயோகப்படுத்தப்பட வேண்டும். அன்றாட நடவடிக்கைகளுக்கும், சிறு சிறு வேலைகளைச் செய்வதற்கும் நம் உண்ணும் உணவு செரித்து அதிலிருந்து கிடைக்கும் சக்தியே உபயோகப்படுத்தப்படுகிறது.. நம்மால் உபயோகப்படுத்தப்பட்டது போக மீதமான சக்தி அல்லது சர்க்கரை இரத்த்த்தில் இருக்கும்.






தசைகளில் வலியானது இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையானது தசை நார்களில் படிவதால் ஏற்படுகிறது.






நம் உணவின் சக்தியில் 60% தசை நார்களின் செயல்பாட்டுக்கு, அதாவது உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றால் செலவழிக்கப்படவேண்டும். இதில் குறைவு ஏற்பட்டால்






தசைப்பிடிப்பு


கால், கை வலி


கெண்டைக் கால் வலி


குடைச்சல்


உடல் வலி


ஆகியவை ஏற்படும்.






இவ்வாறு ஏற்படும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் வலி அதிகம் ஏற்பட்டு கை கால்களைப் பிடித்து மசாஜ் செய்து விட்டால் வலி குறைவது போல் தோன்றும்.






இவற்றைச் சரிசெய்ய:






இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.


தினமும் நடைப்பயிற்சி அவசியம்.


கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் உடற்பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய வேண்டும்.


நடைப் பயிற்சியைத் துவங்குவது எப்படி? நடைப் பயிற்சியை எப்படித் துவங்குவது என்பது மிக முக்கியம். நாம் ஏற்கெனவே தினசரி நடைப் பயிற்சி செய்யும் நண்பரிடம் ”நாளை முதல் நானும் உங்களுடன் நடக்க வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அதன்படி காலை 5 அல்லது 5.30 க்கு எழுந்து, அவருடன் நடப்போம். இரண்டு நாள் அல்லது சில நாட்களில் இந்த முடிவுக்கு வந்து விடும். ஏனென்றால் அவர் ஏற்கெனவே நடை பழகியவர்.






அவர் வேகத்துக்கு நாம் ஈடு கொடுக்க முடியாது


அவர் செல்லும் தூரம் நாம் நடக்க முடியாது.


அப்படியென்றால் எப்படி நடைப்பயிற்சியை ஆரம்பிப்பது?






நடைப்பயிற்சியை மெதுவாகவும் எளிமையாகவும் ஆரம்பிக்க வேண்டும்,


முதலில் 10 ந்மிடம் நடந்து வீடு திரும்புங்கள்.


1 வாரம் இது போல் செய்யவும்.


அடுத்த வாரம் 5 நிமிடம் கூட்டிக் கொள்ளவும்.


நடப்பது த்ற்போது எளிமை ஆகிவிடுகிறது அல்லவா? ஒவ்வொரு வாரமும் 5 நிமிடம் கூடுதலாக நடந்து பழகினால் உங்கள் இலக்கை எந்தக் கஷ்டமும் இன்றி விரைவில் அடையலாம்.


நடப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டுவருவது சிரமமாக இருக்கும், ஆனாலும் அதைக் கடைப்பிடிப்பது அவசியம்.


பொதுவாக உடல் நலனுக்காக நடப்பவர்கள் 20-30 நிமிடங்கள் குறைந்த பட்சம் வாரத்தில் 4-5 நாட்கள் என்ற இலக்கை எட்டுமாறு வைத்துக் கொள்ளலாம்.


பேச்சு வேகத்தில் நடப்பது என்றால் என்ன? நாம் நடக்கும் போது மூச்சின் வேகம் அதிகரிக்கும். நடப்பது சிரமமாகத்தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் பேசிக்கொண்டே நடப்பது எளிதாக இருக்காது. நாளடைவில் பேசிக் கொண்டே நடப்பது எளிதாகி விடும். இது உங்கள் உடல் தகுதி அதிகரித்திருப்பதைக் குறிக்கும்.


பிட்னெஸ் நடைப் பயிற்சி: ஏற்கெனவே நடைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்போருக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் புதிதாகப் நடைப் பயிற்சியில் ஈடுபடும் முன் மருத்துவரின் ஆலோசனை அவசியம். நல்ல நடைபயிற்சிக்கான காலணி ஷூ அவசியம்.






அதே போல் நடப்பதற்கு முன் உங்கள் சர்க்கரை அளவு 100 மி.கி க்குக் கீழ் இருந்தால் ஏதாவது சிறு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பதற்கு முன் இரத்தத்தில் சர்க்கரை 100 க்கு மேல் இருப்பது அவசியம்.






பிட்னெஸ் வாக்கிங்க் என்றால் என்ன? கை,கால் மூட்டுக்களுக்கு அதிக பழு ஏற்படுத்தாமல் செய்யும் நடைப் பயிற்சியே இது. சாதாரண நடையையே கொஞ்சம் கால் எட்டிப் போட்டு நடக்க வேண்டும்.






இன்னொரு வகையில் கீழ்க்கண்டவாறு மாறி மாறி நடப்பதும் மிகப் பலன் தரும்:






மிதமான நடை- 5 நிமிடம்,


கொஞ்சம் வேகம் கூட்டிய நடை-2 நிமிடம்


அதிவேக நடை –1 நிமிடம்


20 நிமிடங்கள் இது போல் நடப்பது உங்கள் உடல் தகுதியைக் கூட்டும்.


மெதுவாக உங்கள் நடை வேகம், நடக்கும் நேரம், நடக்கும் தூரம் ஆகியவற்றைக் காலப்போக்கில் உங்கள் உடல் தகுதிக்கேற்றவாறு கூட்டிக் கொள்ளலாம்.


நடைப் பயிற்சி என்பது நீரிழிவு நோயாளிகள் மட்டுமில்லாமல் அனைவருக்கும் அவசியமான ஒன்று. தொடர்ந்து நடந்து நலம் பெறுவோம்!



Saturday, May 22, 2010

தயிரின்-முக்கியத்துவம்

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.




கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.



தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.



பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.



பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.



த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.



ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

Monday, May 17, 2010

சி‌ரி‌ப்பதா‌ல் உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌ம்

சி‌ரி‌ப்பதா‌ல் உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பது ப‌ல்வேறு மரு‌த்துவ ஆரா‌ய்‌‌ச்‌சிக‌ளி‌ன் மூலமாக அ‌றிய‌ப்ப‌ட்ட உ‌ண்மையாகு‌ம்.




த‌ற்போது ‌சி‌ரி‌ப்பதா‌ல் ஆயு‌ள் கூடு‌கிறது எ‌ன்‌கிறது ஒரு பு‌திய ஆ‌ய்வு. எ‌ப்போது‌ம் ‌சி‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌ப்பவ‌ர்களு‌க்கு 7 ஆ‌ண்டுக‌ள் ஆயு‌ட்கால‌ம் கூடு‌கிறதா‌ம்.



அமெ‌ரி‌க்க‌ப் ப‌ல்கல‌ை‌க் கழக‌ம் நட‌த்‌திய இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல், எ‌ப்போது‌ம் பு‌ன்னகை‌த் தவழு‌ம் முக‌த்துடனு‌ம், மன‌‌ம் ‌வி‌ட்டு ‌சி‌ரி‌த்து வா‌ழ்‌ந்தவ‌ர்க‌ள் சராச‌ரியாக 80 வயது வரை வா‌ழ்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.



‌சி‌ரி‌க்க மற‌ந்தவ‌ர்க‌ள் 72 வயது‌க்கு‌ள்ளாக முதுமை எ‌ய்‌தி மரண‌த்தை தழு‌வு‌கி‌ன்றன‌ர். ‌சி‌ரி‌ப்‌பிலு‌ம் அச‌ட்டு ‌சி‌ரி‌ப்பு ‌சி‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூறு‌கிறது இ‌ந்த ‌ஆ‌ய்வு.



மேலு‌ம், பு‌ன்னகை‌யி‌ன் மூல‌ம் இதய ‌வியா‌திக‌ள் ஏ‌ற்படுவது தடு‌க்க‌ப்படுவது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Wednesday, March 3, 2010

ஆர‌ஞ்சு

ஆர‌ஞ்சு அதாவது கா‌வி ‌நிற‌த்‌தி‌ல் உ‌ள்ள பழ‌ங்க‌ள், கா‌ய்க‌றிக‌ளி‌ல் ‌பீ‌ட்டா கரோ‌ட்டி‌ன், வை‌ட்ட‌மி‌ன் ‌சி ம‌ற்று‌ம் ப‌ல்வேறு ஊ‌ட்ட‌ச்ச‌த்துக‌ள் உ‌ள்ளன.



வயது சா‌ர்‌ந்த பா‌ர்வை‌க் குறைபா‌ட்டை‌த் தடு‌க்க இவை உதவு‌கி‌ன்றன. பு‌ற்றுநோ‌ய் ஆப‌த்தை‌த் தடு‌க்க‌க் கூடிய ச‌க்‌தியு‌ம் இ‌ந்த ‌நிற‌ம் கொ‌ண்ட கா‌ய்க‌றி, பழ‌‌ங்களு‌க்கு உ‌ண்டு.



இதுபோ‌ன்ற பழ‌ங்க‌ள் ம‌ற்று‌ம் கா‌ய்‌‌க‌றிகளை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ம்‌பி‌ல் கொழு‌ப்‌பி‌‌ன் அளவை க‌ட்டு‌ப்படு‌த்‌தி ‌சீராக வை‌க்க உதவு‌ம்.



மேலு‌ம் ர‌த்த அழு‌த்த‌ம் அ‌திகமாக‌ இரு‌ப்பவ‌ர்க‌ள் ஆர‌ஞ்சு பழ‌ம், கேர‌ட், ப‌ப்பா‌ளி போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ர‌த்த அழு‌த்த அளவு‌க் குறையு‌ம்.



‌சிலரு‌க்கு மூ‌ட்டு‌த் தே‌ய்வு, மூ‌ட்டு வ‌லி போ‌ன்ற உபாதைக‌ள் இரு‌க்கு‌ம். அ‌ப்படியானவ‌ர்களு‌ம் கா‌வி ‌நிற‌த்‌திலான உணவு‌ப் பொரு‌ட்களை உ‌ண்டு வ‌ந்தா‌ல் ந‌ல்ல ‌பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

Monday, February 8, 2010

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் கோளாறுகளு‌க்கு

உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.
அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

Tuesday, January 12, 2010

முதுகு வலிக்கு

முதுகுக் கீழ்ப் பகுதியில் வலி இருந்தால் நாம் அலட்சியம் காட்டக்கூடாது. ஏனெனில் அது அப்படியே கீழிறங்கி பின் தொடைப் பகுதிகளையும் சில வேளைகளில் கால் கெண்டைச் சதைகளையும் கூட சென்றடையும்.

நாம் தினசரி காரியங்களில் முதுகு வலிக்கு ஆகாத பல விஷயங்களை அறியாமல் செய்கிறோம். உதாரணமாக கூன் முதுகிட்டு உட்காருவது, நடக்கும் போது கூன் போடுவது, பொருட்களை தூக்கும்போது முதுகை வளைப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.

தண்ணி வாளி, குடங்களை தூக்கும்போது, முதுகு நேராக இருப்பது அவசியம். வெயிட் அதிகமுள்ள பொருட்களை தூக்கும்போது நாம் முதுகை வளைத்தோமானால் தண்டுவடங்களுக்கு இடையிலான வட்டுக்களில் பாரம் அதிகரிக்கும். இதுதான் பிரச்சனை.

உட்கார்ந்த வேலை பார்ப்பவர்களுக்கு முதுகுவலி கட்டாயம் வரும். ஏனெனில் நாம் முதுகை சற்றே வளைக்காமல் உட்கார முயற்சி செய்வதில்லை.

உங்கள் தண்டுவடத்திற்கு முட்டுக் கொடுக்கும் நாற்காலிகள் தேவை. அதேபோல் தூக்கம் அவசியம் நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்குவது கட்டாயம்.

புகைப்பழக்கத்தை நிறுத்துவது நல்லது. ஏனெனில் திசுக்களுக்கு தேவையான பிராணவாயு இன்மை ஏற்படும் இதனால் முதுகுவலி சிகிச்சை பலனளிக்காமல் போய்விடும்.