Saturday, May 22, 2010

தயிரின்-முக்கியத்துவம்

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.




கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.



தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.



பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.



பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.



த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.



ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

Monday, May 17, 2010

சி‌ரி‌ப்பதா‌ல் உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌ம்

சி‌ரி‌ப்பதா‌ல் உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பது ப‌ல்வேறு மரு‌த்துவ ஆரா‌ய்‌‌ச்‌சிக‌ளி‌ன் மூலமாக அ‌றிய‌ப்ப‌ட்ட உ‌ண்மையாகு‌ம்.




த‌ற்போது ‌சி‌ரி‌ப்பதா‌ல் ஆயு‌ள் கூடு‌கிறது எ‌ன்‌கிறது ஒரு பு‌திய ஆ‌ய்வு. எ‌ப்போது‌ம் ‌சி‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌ப்பவ‌ர்களு‌க்கு 7 ஆ‌ண்டுக‌ள் ஆயு‌ட்கால‌ம் கூடு‌கிறதா‌ம்.



அமெ‌ரி‌க்க‌ப் ப‌ல்கல‌ை‌க் கழக‌ம் நட‌த்‌திய இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல், எ‌ப்போது‌ம் பு‌ன்னகை‌த் தவழு‌ம் முக‌த்துடனு‌ம், மன‌‌ம் ‌வி‌ட்டு ‌சி‌ரி‌த்து வா‌ழ்‌ந்தவ‌ர்க‌ள் சராச‌ரியாக 80 வயது வரை வா‌ழ்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.



‌சி‌ரி‌க்க மற‌ந்தவ‌ர்க‌ள் 72 வயது‌க்கு‌ள்ளாக முதுமை எ‌ய்‌தி மரண‌த்தை தழு‌வு‌கி‌ன்றன‌ர். ‌சி‌ரி‌ப்‌பிலு‌ம் அச‌ட்டு ‌சி‌ரி‌ப்பு ‌சி‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூறு‌கிறது இ‌ந்த ‌ஆ‌ய்வு.



மேலு‌ம், பு‌ன்னகை‌யி‌ன் மூல‌ம் இதய ‌வியா‌திக‌ள் ஏ‌ற்படுவது தடு‌க்க‌ப்படுவது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.