Tuesday, December 20, 2011




பப்பாளி பழத்தின் மகிமை


இதோட தாவரவியல் பேரு காரிசிகா பாபாயா. கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்தும் மருத்துவக்குணம் வாய்ந்தவைதான். பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன் படுகிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. பப்பாளிக்காயின் பால்,


வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்குகிறது. இதோட விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது. இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்து. இதய நோயைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

காய்களில் இருந்து பப்பைன் என்ற புரதங்களை சிதைக்கும் நொதி, கைமோபப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, க்ரிப்டோசாந்தின், வயலா சாந்தின், கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், தையமின், ரைபோபிளேவின், கார்ளப்பசமைன் போன்ற ரசாயனப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.

Monday, December 5, 2011

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் முற்றிய பாகற்காய்!


நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு(கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.






Friday, December 2, 2011

உயிர்ச்சத்து தரும் காய்கறி-பழங்கள்




இன்று நாம் சந்திக்கும் ரத்தக் கொதிப்பு, இதயநோய், உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் எல்லாம் ஒரு நூறு வருடத்திற்கு முன்பு கிடையாது. ஏனெனில் அவர்கள் இயற்கையுடன் இழைந்து வீழ்ந்து, இயற்கையான உணவு களையும்

, கை குத்தல் அரிசியும் சாப்பிட்டனர்.


ஐரோப்பிய நாகரிகத்தின் வளர்ச்சியினால் உணவை பதப்படுத்துதல், அதை பாதுகாத்தல் என்ற பெயரில் அதிலுள்ள சத்துக்கள் குறைவதுடன், அதன் ருசியை அதிகரிக்க கொழுப்பு, உப்பு சேர்க்கத் துவங்கி, அந்த கலாச்சாரம் இன்று உலகெங்கும் தலை விரித்து ஆடுகிறது. ஆரோக்கிய சீரழிவை ஏற்படுத்துகிறது.

நம் நாட்டில், அதிக கலோரி உள்ள கோலா பானங்கள், வறுவல்கள், சிறு குழந்தைகளையும் அடிமையாக்கி, ஆரோக்கியத்தை கொல்கிறது. இதனை உணர்ந்துதான் 1980களின் நடுவில் இத்தாலியில் "ஸ்லோபுட்'' என்ற இயக்கம் துவக்கப்பட்டது. அதன் அடிப்படையே அந்தந்த ஊர் மக்கள் அவர்கள் ஊரில் கிடைக்கும் ப்ரெஷ்ஷான காய்கறி, பழ வகைகளையும் தானியங்களையும் உண்ண வேண்டும் என்பதுதான்.


அந்தந்த ஊரில் விளைந்த விளையும் பயிர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதுடன் பாரம்பரிய சமையல் முறைகளை ஊக்கு வித்து மக்களை ஜங்புட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து விடுவிப்பதே இதன் நோக்கம். குழந்தைகளையும், வளரும் சமுதாயத்தையும் குறி வைக்கும் இதன் நோக்கம் வருங்கால தலைமுறை நோயின்றி வாழ வேண்டும் என்பது.

இரண்டாவதாக, அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் உபயோகப்படுத்த வேண்டும். சற்றே பின்னோக்கி பார்த்தால் நம் முன் னோர்கள் பின்பற்றிய முறையும் இதுதான். அவரவர் ஊரில் அரிசி முதல் காய்கறிவரை எந்த ரசாயன உரமும் இன்றி விளைவித்து உண்டதால், நோய் நொடி எட்டிப்பார்க்க வில்லை.

இன்று நாம் நெல்லூர் அரிசி, பஞ்சாப் கோதுமை, ஆந்திரா மிளகாய் என பல இடங்களிலும் பல விதத்திலும் விளைந்த உணவுகளை உண்டதால், அவை வேறு இடத்தில் வளர்ந்ததால் நம் உடம்புடன் ஒத்துப்போவதில்லை. வேறு இடங்களில் விளையும், பழ வகைகள், காய்கறிகள், நம்மிடத்திற்கு வருவதற்குள் அதிலுள்ள உயிர்ச்சத்துக்கள் கழிந்து போய் நாம் உண்பது வெறும் சக்கை தான்.

இதற்கு அதிக விலை வேறு தருகிறோம். உதாரணமாக காஷ்மீர் ஆப்பிள் பல நூறு கிலோ மீட்டர் கடந்து உங்கள் டேபிளுக்கு வரும்போது அதன் சுவையும் சத்தும் குறைந்து விடுகிறது. அதற்கு பதில், நீங்கள் உங்கள் ஊர் வாழைப்பழம் சாப்பிட்டாலே போதும், உயிர்ச்சத்து கிடைக்கும். அதிக செலவுமில்லை.



Saturday, November 26, 2011

கொத்துமல்லி



வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக் கொத்து மல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும்.




கொத்து மல்லி கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறி வரும்.


முகத்தில் ஏற்படும் பருக்கட்டிகளுக்கு கொத்துமல்லி சாற்றை எடுத்து அதில் கொம்பு மஞ்சளை அரைத்து, அரைத்ததை பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறையும், முகம் பளபளப்பாகும்.


கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும்.


கொத்துமல்லி இலைகளை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், கட்டிகளுக்கு வைத்து கட்டி வர அவை சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பருத்து உடையும்.


கொத்துமல்லி சாற்றை தேனோடு கலந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் ஏற்பட்ட பித்த நோய் முற்றிலும் குணமாகும்.




கொத்து மல்லி கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் சிறிதளவு சர்க்கரை போட்டு அருந்தி வந்தால், உடல் உஷ்ணம் நீங்கும். அஜீரணம் உண்டாகாது

கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல்



(Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.


கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.


கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.


கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.


நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.


எது நல்ல கொலஸ்ட்ரால்?


LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


இந்த LDL — இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.


ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)


கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.


•Total Cholesterol <–>200 mgm% மொத்த கொலஸ்ட்டிரால்•LDL Cholesterol <–>100 mgm% குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்•VLDLCholesterol <–>30 mgm% மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்•Triglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்•HDLP Cholesterol <50 mgm % மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்

மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.


குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.


முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.


கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்


பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)


•எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.•ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.•இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.•கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.•பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.•ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.•பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.•இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.•அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.•ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.•இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.


ஒமேகா 3 உள்ள உணவுகள்


•மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்•ஒமேகா 6 உள்ள உணவுகள்•சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.


எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?




நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.




கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:


•· சீரான உடற்பயிற்சி•· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.•· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.•· மது அருந்துவதைத் தவிர்ப்பது•·அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.•· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.•· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .•· யோகாசன பயிற்சி செய்வது,•· தியானப் பயிற்சி செய்வது .





Tuesday, November 22, 2011

;தோல்நோய்களுக்கு மருந்தாகும்  சல்மூக்ரா எண்ணெய்

              
மரங்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. டையேஷியஸ் மரம் அல்லது சல்மூக்ரா எனப்படும் பசுமை மாறா மரம் மேற்கு மலைத் தொடர்களின் காடுகளிலும் கொங்கனில் தெற்குப் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகிறது இந்த



மரத்தின் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. இந்த விதைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

விதைகளில் ஹிட்னோகார்ப்பிக் மற்றும் சால்மூக்ரிக் அமிலங்கள், கோர்லிக், ஒலியிக் மற்றும் பால்மிட்டிக் அமிலங்கள் இவற்றோடு க்ரைசோக்ரைசால், ஐசோஹிட்னோ கார்ப்பின் அகிய வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

சல்மூக்ரா எண்ணெய்

விதைகளில் உள்ள டேனின்கள் காய்ச்சலை குணமாக்கும். அலோபதி மருத்துவத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த எண்ணெயாக சல்மூக்ரா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் லேப்ரஸிக்கு பயன்படுத்தப்படுகிறது.

தோல்நோய்களுக்கு மருந்தாகும்

தோல்நோய்களுக்கு மருந்தாக இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆழமான வெட்டுக்காயம், தோல் நோயினால் ஏற்பட்ட தழும்புகளையும் நீக்கி மேற்புறத்தோலினை பழைய நிலைக்கு கொண்டுவரும். என்சைமா, அரிப்பு, படை உள்ளிட்ட தோல்நோய்களுக்கும் இந்த சல்மூக்ரா எண்ணெய் சிறந்த மருந்தாகும். குழந்தை பிறப்பிற்கு பின்னர் வயிற்றுப்பகுதி சுருங்கி தழும்பு ஏற்படும் போது அவற்றை நீக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது.

குஷ்டநோய்க்கு மருந்து

சால்மூக்ரா களிம்பு ஒரு பகுதி எண்ணெய் 4 பகுதி வாஸலினுடன் கலந்து தயாரிக்கப்படும். இது பல தோல்நோய்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படும். எலுமிச்சை சாற்றோடு கலந்து வாத நோயில் ஏற்படும் சுளுக்குகளை குணப்படுத்தும். விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் குஷ்ட நோய்க்கு மருந்தாகும். 5துளிகள் அளவு எடுத்து படிப்படியாக 30 துளிகள் வரை அதிகரித்து தசைக்குள் ஊசி மூலம் செலுத்தப்படும். இதற்கு எத்தில் எஸ்டர்கள் மற்றும் ஹிட்னா கார்ப்பிக் அமில உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

அரைத்த விதைகள் பிற பொருட்களான சல்ஃபர்,கற்பூரம்,எலுமிச்சை சாறு ஆகியவற்றோடு கலந்து மற்றும் ஜட்ரோஃபா சர்க்காஸ் விதை எண்ணெயோடு கலந்து காயங்கள் மற்றும் புண்கள் குணப்படுத்தப் புறப்பூச்சாகப் பயன்படும்.





Wednesday, November 9, 2011

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள்

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.


1. வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள

கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

2. குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம் கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

3. யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.


4. முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

5. செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

6. சீதோஷ்ண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

7. புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

8. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.


9. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

10. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.

11. அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.



Monday, October 17, 2011

எடை தானாக குறையும்






.உங்களின் எடை தானாக குறையும்.ஒரு வாரத்திற்கு,அரைகிலோவிலிருந்து ஒரு கிலோ வரைஎடை குறைந்தால்,சரியான வழியில்எடையைக்குறைக்கிறீர்கள்


என்று அர்த்தம்.


1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள்.


ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை


தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒருபிடி


பிடிக்க நேரிடும்.


2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விடசிறந்தது.


நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.


3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள்


சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ்வகைப்


பழமாக இருக்கட்டும்.


4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலிப்ளவர், முருங்கைக்காய்,


சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய்,சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய்,


,வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில்ஏதேனும்


தினமும் உணவில் இரண்டு கப் (400கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு


வகைகளைதவிர்த்து விடுங்கள்.


5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு,


கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும்


அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள


கைக்குத்தல் அரிசி,கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை


ரவை, கேழ்வரகு,கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி


சேர்த்துக்கொள்ளுங்கள்.


6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்புசத்துள்ள ‘டோன்டு பாலில்)


தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.


7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர்அருந்துங்கள்.


8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின்வெள்ளைக்


கரு ஆகியவற்றைவேகவைத்து சாப்பிடலாம். கிரேவிவேண்டாம்.


9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்ஆகியவற்றை ஒரு


நாளைக்கு டீஸ்பூன் உபயோகிக்கவும்.






Friday, July 22, 2011

முருங்கைக்குதனிச் சிறப்பு


                        


மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். முருங்கையில் காட்டு முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு. இதில் காட்டு முருங்கை இலை மிகவும் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவக் குணங்கள் மிக மிக அதிகம்.


பொதுவாக முருங்கையின் பூ மிகவும் சக்தி வாய்ந்தது. முருங்கைப் பூ சாப்பிட்டு வந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும். விந்தணு பெருகும். விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று சொல்பவர்கள் சாப்பிட்டால் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும். நாய்க் கடி விஷத்தைப் போக்கவும் முருங்கை பயன்படும். கிட்னி தொடர்பான பிரச்சனைகளுக்கும் முருங்கை இலை முக்கியத்துவம் வாய்ந்தது. இரத்தக்கட்டு வீக்கத்திற்கு முருங்கை இலையை அரைத்துப் பூசினால் நீங்கும்.

முருங்கைப் பூ உடல் சூட்டைக் குறைக்கும், தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும். சளி தொந்தரவையெல்லாம் முருங்கைப் பூ நீக்கும். கண் பார்வைக்கு நல்லது. முருங்கை மர‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் ‌பி‌சி‌னை பதப்படுத்தி சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சிகளெல்லாம் வெளியேறிவிடும். அதனால் வீட்டில் முருங்கையை வளர்த்தால் எல்லா விதத்திலும் நல்லது. வாஸ்துப்படி முருங்கையை வீட்டின் முன்புறத்தில் வைக்கக்கூடாது. வீட்டின் பின்புறத்தில் வைத்தால் எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும்.

Sunday, July 10, 2011

சிப்ஸ் பீட்சா உருவாக்கும் கொழுப்பு அடிமைகள்




வாஷிங்டன்: சிப்ஸ், பீட்சா, பர்கர் உள்ளிட்ட ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் சுரப்பிகளின் இயக்கம் தாறுமாறாகும். மூளையின் செயல்பாடுகள் படிப்படியாக பாதிக்கப்படும் என்று லேட்டஸ்ட் ஆய்வு எச்சரிக்கிறது. கொழுப்பு உணவுகளுக்கு அடிமையாகிற அபாயமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.



இட்லி, தோசையை விட்டு விலகி வர யோசிக்கிற ஒரு சில பெரியவர்களை விட இதர ரகத்தினர் எல்லாரையும் வசீகரித்திருப்பவை சிப்ஸ், பீட்சா, பர்கர் உள்ளிட்ட ஜங்க் புட்கள். உடல்நலத்துக்கு இவை அவ்வளவு நல்லதல்ல என்று அவ்வப்போது தகவல்கள் வெளியானபோதும், இவற்றை விட மனம் வருவதில்லை. ஜங்க் உணவுகளால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இர்வின் பல்கலைக்கழகம், நேஷனல் அகடமி ஆப் சயின்சஸ் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. இதில் தெரியவந்த தகவல்கள்:


ஜங்க் உணவுகளில் கூடுதல் சுவைக்காக பல விதங்களில் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அதிகம் சேர்ந்தால் உடல்நலம் பாதிக்கும். எதிர்ப்பு சக்தி பெருமளவு குறையும். ‘பயாலஜிகல் மெக்கானிசம்’ என்ற உடலின் இயல்பு நிலை பாதிக்கப்படும். என்டோகெனாபினாய்ட்ஸ் என்ற ஒரு விதமான ரசாயன சுரப்பு உடலில் அதிகரிக்கும். இது அதிக கொழுப்புள்ள உணவுகளை நாடும் தன்மை கொண்டது. இதனால் அத்தகைய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல் அதிகமாகும். செரிமான கோளாறு ஏற்படும்.


இந்த நிலை தொடர்ந்தால் உடலில் இயற்கை சுரப்பிகள் பாதிக்கப்படும். மூளைக்கு ஒழுங்காக சென்றுகொண்டிருக்கும் சிக்னல்கள் பாதிக்கப்பட்டு, உடலின் இதர செயல்பாடுகளும் படிப்படியாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகும்.


எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜங்க் உணவுகளில் அதிகம் இருக்கும் ரசாயன பொருட்களை ஊசி மூலம் எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு, எலிகளின் உடலில் என்டோகெனாபினாய்ட்ஸ் அளவு அதிகரித்திருந்தது. அதன் பிறகு, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை மேலும் மேலும் விரும்பி தின்றன. எலியின் இயல்பான செயல்பாடுகள் படிப்படியாக குறைந்தன. போதை பழக்கத்துக்கு அடிமையானதை போல முடங்கி கிடந்தன. மீண்டும் ஜங்க் புட் ரசாயனம் நீக்கப்பட்ட பிறகு, எலிகள் இயல்பு நிலைக்கு திரும்பின.


இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.





Friday, July 1, 2011

மார்பக புற்று நோய் வராது


                                      


டொரன்டோ: தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது பட்டால், மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.


இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சூரிய ஒளி நம்மீது படும்போது, வைட்டமின் டி உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் டியை, ஒருவித ஹார்மோனோக மாற்றும் திறன் பெற்றவை. இந்த ஹார்மோன்தான், மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம், நடுத்தர, வயதான பெண்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது படும்படி பார்த்துக்கொண்டால், மார்பக புற்றுநோய் ஆபத்தில் இருந்து விடுபடலாம். ஆண்களை பொறுத்தவரை, வைட்டமின் டி மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறதாம்.









Sunday, June 26, 2011

கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால்







இயற்கையின் கொடையான பூமியில் மனித தேவைக்கான புதையல்கள் ஏராளம். அவற்றில் முதலிடத்தில் இருப்பவை காய்கறிகள், பழங்கள். உடல் இயக்கத்துக்கு தேவையான சத்துகளை காய்கறிகள் தருவதாகவும் உடலில் தேவையற்ற பொருட்களை பழங்கள் நீக்குவதாகவும் மருத்துவ உலகம் கூறுகிறது. கிருமி, நோய் தாக்குதலில் இருந்தும் இவை நம்மை பாதுகாக்கின்றன. பழங்களிலும் பல்வேறு வகையான சத்துகள் உள்ளன. ஒவ்வொரு பழத்திலும் தன்மைக்கேற்ப உள்ள சத்துகள் ஆரோக்கியம் அளிப்பவை. கிவி பழத்தில் வைட்டமின் சி, தாதுக்கள், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஆன்டி ஆக்சிடென்ட்கள், பைடோநியூட்ரியன்ட் சத்துக்கள், நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. அசப்பில் சப்போட்டா போல இருக்கும். இதன் உள்புறம் பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் தங்கம் போல இருக்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடையது. ஒரு முறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் அலாதி சுவை. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது. மொத்தத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது.




கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் குடல் கேன்சர், இதய நோய்கள், முதுமையில் ஏற்படும் தோல் பாதிப்பு, சர்க்கரை நோய் தீவிரம் குறையும். செரிமான கோளாறுகள் நீங்கும். இது மட்டுமின்றி இருமல், சளி, ஃப்ளூ காய்ச்சல், ஆஸ்துமா போன்றவற்றையும் கிவி விரட்டுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் உடல் வலுவடையும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சோர்வின்றி உற்சாகத்துடன் இருக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.



Thursday, June 9, 2011

மாதுளையில் பல்வேறு மருத்துவ குணங்கள்




மாதுளையில் பல்வேறு மருத்துவ குணங்கள்



எடின்பர்க்: ஆபீஸ் டென்ஷன், வீட்டு டென்ஷன், பரபரப்பு, படபடப்பு, எரிச்சல்.. ஆகியவற்றை மாதுளை ஜூஸ் தீர்க்கிறது என்பது லேட்டஸ்ட் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் உள்ளது குயீன் மார்கரெட் பல்கலைக்கழகம். இங்கு பேராசிரியர் எமட் அல் துஜைலி தலைமையில் சமீபத்தில் மாதுளையின் பயன்கள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்காக சிலர் தேர்வு செய்யப்பட்டனர். வீடு, அலுவலகத்தில் வேலைகளுக்கு நடுவே தினமும் அரை லிட்டர் மாதுளை ஜூஸ் குடிக்குமாறு அவர்களிடம் கூறப்பட்டது. ஜூஸ் குடிப்பதற்கு முன்பும் குடித்த பிறகும் மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களது மனநிலை, மகிழ்ச்சி, படபடப்பு தன்மை ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளுமாறும் கூறப்பட்டது.




2 வார காலத்துக்கு ஆய்வு நடந்தது. ஆய்வு தொடங்கும் முன்பும் 2 வாரம் கழித்தும் இதயத் துடிப்பு, பி.பீ., பல்ஸ் உள்பட எல்லா சோதனைகளும் செய்யப்பட்டன. அவர்களது படபடப்பு, பதற்றம் ஆகியவை கணிசமான அளவு குறைந்திருந்தன. இதுபற்றி பேராசிரியர் அல் துஜைலி மேலும் கூறியதாவது: மாதுளையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதையும் அது உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதையும் தொடர் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. மாதுளை சாறு மனஉளைச்சலுக்கும் மருந்தாகிறது என்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதயத்துடிப்பை மாதுளை ஜூஸ் சீராக்குகிறது.



வீட்டிலும் அலுவலகங்களிலும் ஏற்படும் படபடப்பு, பதற்றத்தை தணிக்கிறது. மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. இதன்மூலம், ஒரு செயலை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை, நேர்மறை எண்ணம் அதிகரிக்கிறது. ஆய்வில் மாதுளை ஜூஸ் குடித்த போது மிகவும் உற்சாகமாக, சுறுசுறுப்பாக, நல்ல மூடில் இருந்ததாக எல்லாரும் கூறினர். எந்நேரமும் பரபரப்பான சூழ்நிலையில் வேலை செய்கிறவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ மாதுளை ஜூஸ் சிறந்த மருந்து. இவ்வாறு அல் துஜைலி கூறினார்.



Tuesday, June 7, 2011

உடல் எடையை பருமனை குறைக்க









உடல் எடையை பருமனை குறைக்க சிலர் படாதபாடுவார்கள்.உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவாறாக முயன்றும் உடல் பருமன் குறையவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

அப்படியானவர்கள் தேநீர் அருந்தி உடல் பருமனை குறைக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர் ஜப்பான் கோப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

தொடர்ந்து தேநீர் அருந்துவதால்,கொழுப்பு உணவுகளால் உடல் பருமன் ஏற்படுவதையும், டைப் 2 சர்க்கரை வியாதி ஏற்படுவதையும் தடுப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின்போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட்டன.பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக்களாக பிரிக்கப்பட்டு,அவைகளுக்கு தண்ணீர், பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவை 14 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டன.

இதில் இந்த இரண்டு வகை தேநீரும் உடல் பருமனை குறைப்பதோடு, தொப்பை வயிறையும் குறைக்கிறது என்பது தெரியவந்ததது.
அதே சமயம் பிளாக் டீயை விட கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேநீர் மிகவும் பயனுள்ளது என்றும், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கூறும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்,பச்சை தேயிலை தேநீருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இந்த தகவலை 'த டெய்லி மெயில்' என்ற ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது.

Sunday, June 5, 2011

அப்பென்டிக்ஸ்

லண்டன் : வாலிப வயதுக்கு முன்பே டான்சில்ஸ், அப்பென்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்வதால் பிற்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


சுவீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம், இம்ரி ஜான்ஸ்கி தலைமையில் இதுகுறித்த ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் வெளியான தகவல்கள்:

இளம்வயதிலேயே அறுவை சிகிச்சைகள் செய்வதால் உடலின் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். குறிப்பாக 20 வயதுக்குள் டான்சில்ஸ், அப்பென்டிக்ஸ் உள்ளிட்ட அறுவை சிகிச்சை செய்வதால் பிற்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். டான்சிலெக்டமி என்ற டான்சில்ஸ் ஆபரேஷனால் 44 சதவீதமும், அப்பென்டிக்சால் 33 சதவீதமும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

இரண்டு அறுவை சிகிச்சைகளும் செய்து கொண்டவர்களுக்கு இந்த அபாயம் மேலும் அதிகரிக்கும். 20 வயதுக்குள் உள்ள 10 முதல் 20 சதவீதம் பேர் பெரும்பாலும் இத்தகைய அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கின்றனர். இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரத்த நாளங்களையும் இது பாதிக்கும் என்பதால் இதயத்துக்கு செல்ல வேண்டிய ரத்தம் மற்றும் பிராண வாயு தடைபடும். இத்தகைய நிலை தொடரும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே டான்சில்ஸ் மற்றும் அப்பென்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்வது அவசியம் என்கிறது அந்த ஆய்வு.







Thursday, May 5, 2011

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்



நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.



வெள்ளைப் பூண்டு:

பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.



வெங்காயம்:

வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்:

நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் ொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.







ஆரஞ்சு :

வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.







பருப்பு வகைகள் :

பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.











கோதுமை ரொட்டி :

நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.







இறால் மீன் மற்றும் நண்டு :

அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.







தேநீர் :

தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.







பாலாடைக்கட்டி :

சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.







முட்டைக்கோஸ் :

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.



மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.



Saturday, April 30, 2011

புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை


கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி எனப்படும் திராட்சைப்பழம். திராட்சைப் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.

கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். சிறுகுழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலங்களில் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு சிலகுழந்தைகளுக்கு வலிப்பு நோயும், உண்டாகும். இதற்கு திராட்சைச் சாறு அருமருந்தாகிறது.
ஜலதோஷத்தினால் ஏற்படும் நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திராட்சை பலச்சாறு குணப்படுத்துகிறது. மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

ரத்த சோகைக்கும் காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் மற்றும் உடல்புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிர்க்கு திராட்சை சிறந்த மருந்து.

சிறிய அளவில் எடுத்துக் கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு. திராட்சைப் பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள்.

அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாத உடம்புக்குள்ளானவர்களும் அதிக அளவில் திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.



Saturday, April 23, 2011

தயிர் சிறந்த மருந்து



சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.


சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

Friday, April 8, 2011

வாழைப்பழம்







கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும். செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும்.




பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும். ரஸ்தாளி வாழை கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது.



பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும். நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும்.



பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது.



மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.



ஆப்பிள் மலச்சிக்கலைப் போக்கும்.



திராட்சை இரத்த அழுத்தத்திற்கு நல்லது. ஈரல் சம்பந்தமான நோய் குணமாகும்.



எலுமிச்சைப் பழம் உடல் சோர்வையும், மலச்சிக்கலையும் போக்கும்.



செர்ரி பழம் கருப்பை வியாதிகளுக்கு நல்லது.



மாதுளம் பழச்சாற்றில் பால் சேர்த்து சாப்பிட இரும்புச் சத்து கிடைக்கும். குடல் புழுக்கள் அழியும்.



அன்னாசிப் பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.



நாவல் பழம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.



சாத்துக்குடி இரத்த அழுத்தத்திற்கு நல்லது.



கமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும், பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.



கொய்யாப்பழம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. கல்லீரல் பலப்படும்.


கோவைப்பழம் சாப்பிட்டால் பல்வலி குணமாகும்.



அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

Tuesday, March 29, 2011

பாதாம் பருப்பு


சர்க்கரை நோய் அல்லது இருதய நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அது ஆயுசுக்கும் பாடாய்படுத்தி விடும்.


இந்நிலையில் இந்த இரண்டு நோயையுமே கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக ஆய்வை நடத்திய மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பாதம் பருப்பு மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 வகை சர்க்கரை நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுஅதில் முக்கிய பங்காற்றுகிறதாம்.

மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறதாம்.

சர்க்கரை நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்வடுதும் திறன் குறையலாம்.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.

Thursday, March 17, 2011

அமிலம் உள்ள உணவு





குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.


* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.


பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.

அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.



* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.



* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.



* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.



* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.



மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.





நார்ச்சத்துடன் கூடிய உணவு



உங்கள அத்தியாவசிய உணவு பட்டியலில் நார்ச்சத்துடன் கூடிய உணவு மிகவும் அவசியமானது.ஜீரணம் சீராக நடைபெறவும், உங்களது உடலில் கொழுப்பை கட்டுப்படுத்துவதிலும், இருதய நோய் வரும் ஆபத்தை குறைப்பதிலும், இரண்டு வித சர்க்கரை நோய் உருவாவதை தடுப்பதிலும்,அவ்வளவு ஏன்... சில வகை புற்றுநோயை வரவிடாமல் தடுப்பதிலும் கூட நார்ச்சத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நார்ச்சத்து எவ்வளவு தேவை?

இத்தகைய நார்சத்து உங்களது உடலுக்கு எந்த அளவு தேவையாக உள்ளது என்று பார்த்தால், 50 வயது வரையிலான ஆணுக்கு நாளொன்றுக்கு 38 கிராமும், பெண்ணுக்கு 25 கிராமும் தேவையாக உள்ளதாக கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.அதே சமயம் 50 வயதுக்கு மேல் நார்சத்தின் தேவை சற்று குறையும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.



ஆனால் துரதிருஷ்டவசமாக நம்மில் பெரும்பாலானோர் மேற்கூறிய பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய நார்ச்சத்து கொண்ட உணவுகளை தினசரி எடுத்துக்கொள்வதில்லை. உண்மையில் சராசரியாக நம்மவர்கள் நாளொன்றுக்கு 14 கிராம் நார்ச்சத்தை மட்டுமே எடுத்துக்கொள்வதாக மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் கூறுகின்றனர்.



ஒவ்வொருவரும் தினமும் எடுத்துக்கொள்ளும் நார்ச்சத்தின் அளவு, அவர்கள் எந்த அளவு கலோரி உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அமைகிறது. 1000 கலோரிகளை கொண்ட உணவை ஒருவர் எடுத்துக்கொண்டால் அவருக்கு 14 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது.எனவே உதாரணத்திற்கு நீங்கள் 2,500 கலோரி உணவுகளை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு நாளொன்றுக்கு 35 கிராம் நார்ச்சத்து கிடைக்கும்.

Friday, March 11, 2011

சைவ உணவு

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:




நச்சுக்களை அகற்றுபவை:



நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.



எலும்புகளை வலுவாக்குபவை:



இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.



மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.



கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:



அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.



எளிதில் ஜீரணம்:



சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.



ஆரோக்கியமான மேனி:



பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.




Monday, March 7, 2011

'உணவே மருந்து





'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி












Tuesday, February 8, 2011

பாகற்காய்




பிப்.8:நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.


உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.


1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.


5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.


6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.