Monday, November 23, 2009

மாத்திரைகளால்-ஆரோக்கியத்திற்கு-ஆபத்து



இன்றைய அவசர உலகில் பலரும் காய்ச்சல், தலைவலி மற்றும் சின்னச் சின்ன உடல் சிக்கல்களுக்கு‌க் உடனடியாக ஒரு மா‌த்‌திரையை ‌விழு‌ங்க வே‌ண்டு‌ம். உடனே உட‌ல் உபாதை ‌தீர வே‌ண்டு‌ம் எ‌ன்று கருது‌கி‌ன்றன‌ர்.

அ‌‌திலு‌ம், ‌உ‌ரிய மரு‌த்துவரை ச‌ந்‌தி‌த்து அவ‌ர் எழு‌தி‌க் கொடு‌க்கு‌ம் மா‌த்‌திரையை‌ச் சா‌ப்‌பிட‌க் கூட அவ‌ர்களு‌க்கு நேர‌மி‌ல்லையா‌‌ம். அதனா‌ல் பலரு‌ம் நேராக மருந்து கடைகளு‌க்குச‌் செ‌ன்று த‌ங்களது ‌பிர‌ச்‌சினைகளை‌க் கூ‌றி ஏதாவது மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு விடுகின்றனர்.

இது மாத்திரையை மட்டுமல்ல... ஆபத்தையும் விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமல் செய்கின்றனர். ஆனால் அவர்கள் கேட்கும் கேள்வி, இப்படி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டாக்டரிடம் போக முடியுமா? எ‌ன்பதுதா‌ன்.

இது நமது உடல் சம்பந்தப்பட்டது என்பதை முத‌லி‌ல் உணர வேண்டும். ‌ஒ‌வ்வொரு வ‌லியு‌ம் ஒரு நோ‌யி‌ன் அ‌றிகு‌றி எ‌ன்பதை உணர வே‌ண்டு‌ம். ஒருவரு‌க்கு தலை வ‌லி‌க்‌கிறது எ‌ன்றா‌ல் அத‌ற்கு எ‌த்தனை எ‌த்தனை காரண‌ங்க‌ள் இரு‌க்கலா‌ம் எ‌ன்று தெ‌ரியுமா? பா‌ர்வை‌க் கோளாறு, சைன‌ஸ் ‌பிர‌ச்‌சினை, தலை‌யி‌ல் ‌நீ‌‌ர் அழு‌த்த நோ‌ய் என ப‌ல்வேறு ‌விஷய‌ங்களா‌ல் தலைவ‌லி ஏ‌ற்படலா‌ம். இதையெ‌‌ல்லா‌ம் பா‌ர்‌க்காம‌ல், வெறு‌ம் தலைவ‌லியை‌ப் போ‌க்க ‌வ‌லி ‌நிவார‌ணி சா‌ப்‌பிடுவதா‌ல் ஒரு ‌வியா‌தியை நம‌க்கு உண‌ர்‌த்துவத‌ற்காக வ‌ந்த தலைவ‌லி போ‌ய்‌விடலா‌ம். ஆனா‌ல் அ‌ந்த நோ‌ய்... ந‌ம்மை எ‌ன்ன செ‌ய்யு‌ம் எ‌ன்று ‌சி‌ந்‌தி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.

மேலு‌ம் ‌சிலர‌் எடு‌த்தத‌‌ற்கெ‌ல்லா‌ம் மா‌த்‌திரை போடு‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல், உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் நோ‌ய் ‌எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌திக‌ள் பயன‌ற்று‌ப் போ‌கி‌ன்றன. அவ‌ற்‌றி‌ற்கு வேலை கொடு‌க்காமலேயே ‌வி‌ட்டு‌விடுவதா‌ல், அவ‌ற்‌றி‌ற்கு‌ம் இய‌ங்கு‌ம் ச‌க்‌தியே‌ப் போ‌ய், அவ‌ர் ஒரு மா‌த்‌திரை ம‌னிதனா‌கி‌ப் போ‌ய்‌விடுவா‌ர்‌.

பொதுவாக பலரு‌ம், ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்று நோயை‌க் கூ‌றியது‌ம், அவ‌ர் எழு‌தி‌க் கொடு‌‌க்கு‌ம் மரு‌ந்தை‌ப் போ‌ட்டது‌ம் நோ‌ய் ச‌ரியா‌கி‌வி‌ட்டா‌ல் உடனே அவ‌ர் கைரா‌சி ம‌ரு‌‌த்துவ‌ர் எ‌ன்று கூறு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அவ‌ர் அ‌ந்த பெய‌ர் எடு‌ப்பத‌ற்காக, எ‌வ்வளவு அ‌திக ‌வீ‌ரிய‌மி‌க்க மரு‌ந்துகளை நம‌க்கு ப‌ரி‌ந்துரை‌க்‌கிறா‌ர் எ‌ன்று அ‌றி‌ந்‌திரு‌ப்போமா?

‌சில மரு‌த்துவ‌ர்க‌ள் எழு‌தி‌க் கொடு‌க்கு‌ம் மா‌த்‌திரைக‌ளி‌ல் அ‌திக‌ப்படியான செயலா‌ற்று‌த் ‌திற‌ன் காரணமாக, நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர், நோ‌யி‌ன் தா‌க்குதலை ‌‌விட, மரு‌ந்‌தி‌ன் தா‌க்க‌த்‌தினா‌ல் கடுமையாக பா‌தி‌க்க‌ப்படு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம். தலை சு‌ற்ற‌ல், கை கா‌ல் நடு‌க்க‌ம், நா‌க்கு, உதடு வற‌ண்டு போவது, உட‌லி‌ல் ‌‌நீ‌ர்‌த்த‌ன்மை குறைவது, ‌நினை‌வை இழ‌ப்பது வரை ஒரு மா‌த்‌திரை‌யி‌ன் ப‌க்க ‌விளைவுக‌ள் ஏராள‌ம் ஏராள‌ம்.

இப்படி நாம் நம்முடைய இஷ்டத்திற்கு வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் அப்போதைய நிவாரணி என்றாலும், பின்னாளில் நம்முடைய உடலுக்கு பெரும் தீங்கினை விளைவிக்கும் என்று கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

WDகுறிப்பிட்ட வகை மாத்திரைகள் காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு கொடுக்க கூடியது என்றாலும், நோயின் தன்மை, அதற்கான அடிப்படை காரணம், நோயாளியின் உடல் ‌நிலை ஆகியவற்றை பொறுத்தே மாத்திரை, மருந்துகள் கொடுக்க வேண்டும். அப்படியில்லாமல் படு வீரியமான மாத்திரைகள் கண்டிப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் அவ‌ர்க‌ள்.

உதாரணமாக, ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வரும்போது, அந்த குழந்தைக்கு காய்ச்சலுக்கான குறிப்பிட்ட மாத்திரைகளை கொடுத்தால் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதேபோல் தான் மற்ற பிரச்சினைகளுக்கும் மாத்திரைகள் எதிர் விளைவை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் கருத்து.

நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான உடல் வாகு இருக்கும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், நம்முடைய விருப்பத்திற்கு தகுந்தாற்போல் மாத்திரையை சாப்பிடும்போது, அந்த மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அல்சர், வயிற்று பிரச்சினை, சிறுநீரக பாதிப்பு போன்றவை உண்டாகும். பொதுவாக மாத்திரை சாப்பிடுபவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்க மாட்டார்கள். இதனால் கிட்னி பிரச்சினை மற்றும் நீரிழிவு ‌நோ‌ய் உள்ளவர்கள் மரு‌த்துவ‌ரி‌ன் ப‌ரி‌ந்துரை இன்றி மாத்திரைகளை சாப்பிடும்போது பிரச்சினை பெரிதாகும்.

இந்தியாவில் உருவாக்கப்படும் மாத்திரைகளில் பெரும்பாலும் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்புகளுக்கும் மற்றும் இன்னும் சில தேவைகளுக்கும் சேர்த்தே ஒரே மாத்திரையாக தயாரிக்கின்றனர். இதனால் தான் நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

நம்மில் பலருக்கு காலையில் டிபன் சாப்பிடும் பழக்கம் குறைவு. மேலும் வெறும் வயிற்றில் காபி, டீ மற்றும் பால் சாப்பிட்டுவிட்டு மாத்திரைகளை சாப்பிடும் பழக்கமும் உள்ளது. இதனால் உடலில் பல வித நோய்களை நீங்களே வரவழைக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உங்களின் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும். வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.

பெரு‌ம்பாலு‌ம் நா‌ம் மரு‌த்துவ‌ரிடமே செ‌ல்லாம‌ல் மரு‌ந்து‌க் கடை‌யி‌‌ல் மா‌த்‌திரை வா‌ங்குவது தலைவ‌லி‌க்கு‌ம், கா‌ய்‌ச்சலு‌க்கு‌ம்தா‌ன். ஆனா‌ல் ஒரு முக்கியமான விஷயம் எ‌ன்னவெ‌‌ன்றா‌ல்... தலைவலியில் 45 வகைகளும், காய்ச்சலில் 40 வகைகளும் இருக்கின்றன. இதில் எந்த வகை‌க்கு ‌நீ‌ங்க‌ள் மா‌த்‌திரை வா‌ங்கு‌கி‌றீ‌ர்க‌ள்? ‌வியா‌தியை குண‌ப்படு‌த்துவத‌ற்கு‌த்தா‌ன் மரு‌ந்து மா‌த்‌திரைகளே‌த் த‌விர, உடலை‌க் கெடு‌த்து‌க் கொ‌‌ள்ள அ‌ல்‌ல... எத‌ற்கெடு‌த்தாலு‌ம் மாத்திரையை சாப்பிடுவதால், மரு‌ந்தே இ‌ல்லாத ஒரு நோயை ‌நீ‌ங்க‌ள் வரவழை‌த்து‌க் கொ‌ள்ள நே‌ரிடு‌ம்... எ‌ச்ச‌ரி‌க்கை.
«12

12»

Friday, November 20, 2009

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
பலரையும் பாதிக்கும் நோய்களில் நீரிழிவு நோயும் முக்கியமானது. நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: * மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்த்து நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கீரை பச்சைக் காய்கறிகளை சாப்பிடலாம். * உணவில் அரிசியைத் தவிர்த்து கோதுமை உணவு வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். * இனிப்புகள், கிழங்கு வகைகள் பொதுவாக கொழுப்புச் சத்து அதிகம் உள்ள எண்ணெய் பதார்த்தங்கள் ஆகியவைகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.* நீரிழிவு நோயாளிகள் தினமும் 30 நிமிடங்கள் நடை பயிற்சி மற்றும் மிதமான உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.* மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும். உயரத்திற்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும். * 30 வயதினை கடந்த ஒவ்வொருவரும் ஆண்டிற்கு ஒரு முறை நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். * கர்ப்பமான பெண்கள் நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம். இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

நடைப்பயிற்சி எப்படி

நடைப்பயிற்சி எப்படி செல்ல வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது.அவரவர் உடல் பருமனுக்கு ஏற்ப நடக்கும் வேகத்தை குறைக்க வேண்டும் அல்லது அதிகரிக்க வேண்டும்.நடந்தால் போதும் என்று அவரவர் இஷ்டப்படி நடக்கிறார்கள்.இதனால் பிரச்னைகள்தான் உருவாகின்றன.பொதுவாக நடைப்பயிற்சி செல்லும் ஒருவர் நிமிடத்திற்கு 100 அடிகள் எடுத்து வைப்பதே நல்லது.இதுதான் மிதமான உடற்பயிற்சி.இந்த வேகத்தில் தினமும் 30 நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சியாக அமையும் என்கிறது ஆய்வு முடிவுகள்

சீனி அறவே தேவையில்லை

மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும்.காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

கீரை சாப்பிடுங்கள்


அரைக் கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, உடல் வலிமை பெறும்; தலைமுடியும் நன்கு வளரும்.அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, குடல் புண்கள் குணமாகும். வாரம் ஒரு முறை உண்பதால், வயிற்றில் காணப்படும் புழுக்கள் அழியும்.பசலை‌ ம‌ற்று‌ம் வ‌ெ‌ந்தய‌க் ‌கீரையை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் உஷ‌்ண‌ம் குறையு‌ம்.பு‌ளி‌ச்ச‌க் ‌கீரை‌யி‌ல் அ‌திக இரு‌ம்பு ச‌த்து இரு‌ப்பதா‌ல் உ‌ட‌ல் பல‌வீனமானவ‌ர்க‌ள் உ‌ண்டு வ‌ந்தா‌ல் உட‌ல் பல‌ம் பெறு‌ம்.தூதுவளை‌க் ‌கீரை ச‌ளி‌க்கு மரு‌ந்தாக அமையு‌ம், அதனை துவைய‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம்.

வாழை‌ப் பழ‌ம்


வாழை‌ப் பழ‌ம் எ‌‌ன்பது ‌மிகவு‌ம் ம‌லிவான ‌விலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் பழ‌ம் எ‌ன்ற போ‌திலு‌ம், அ‌தி‌ல் ‌இ‌ரு‌க்கு‌ம் ச‌‌த்துகளு‌ம், மரு‌த்துவ குண‌ங்களு‌ம் வேறு எ‌ந்த பழ‌த்‌திலு‌ம் இரு‌க்காது. ப‌ல்வேறு நோ‌‌ய்களு‌க்கு வாழை‌ப்பழ‌ம் மரு‌ந்தாகவு‌ம் அமை‌கிறது.

அதாவது, நெஞ்செரிப்பு நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ள், வாழ‌ை‌ப் பழ‌ம் சா‌ப்‌பிடலா‌ம். வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் ‌விரை‌வி‌ல் ‌குணமா‌கி‌விடும்.

உடற்பருமனாக இரு‌ப்பவ‌ர்களு‌ம், மெ‌லி‌ந்த தேக‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌‌க்கு‌ம் வாழை‌ப் பழ‌ம் பய‌ன்தரு‌ம். அதாவது உட‌ற் பருமனாக இரு‌ப்பவ‌ர்க‌ள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வ‌ந்தா‌ல் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ‌நிலையான தன்மைக்கு கொண்டு வருவதா‌ல் உடற்பருமன் குறைவதாக அந்த மரு‌த்துவ ஆ‌ய்வுக‌ள் தெரிவிக்கின்றன.

மேலு‌ம், ஒ‌ல்‌லியான தேக‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள் ‌தினமு‌ம் இர‌ண்டு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் எடை கூடு‌ம் எ‌ன்று‌ம் அ‌றிய‌ப்படு‌கிறது.

‌தினமு‌ம் ஒருவ‌ர் ஒரு வாழை‌ப் பழ‌த்தை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் அவரு‌க்கு இய‌ற்கையாக ஏ‌ற்படு‌ம் பல ‌வியா‌திக‌ள் உ‌ண்டாகாது எ‌ன்பது பலரு‌ம் அ‌றி‌ந்தது.

அ‌ல்ச‌ர் என‌ப்படு‌ம் குடற்புண்‌ ஏ‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

பொதுவாக நமது ம‌ண்‌ணி‌ல் ‌விளையு‌ம் மர‌ம் வாழை மரமாகு‌ம். எனவே, இது நமது உடலு‌க்கு ஏ‌ற்ற‌ப் பழமாகவு‌ம் கருத‌ப்படு‌கிறது.
ஒரு ‌ஆ‌ப்‌பிளை சா‌ப்‌பிடுவதா‌ல் ‌கிடை‌க்கு‌ம் ச‌க்‌தியை ‌விட, வாழை‌ப் பழ‌த்‌தி‌ன் மூலமாக நமது உடலு‌க்கு ஏராளமான ச‌த்துகளு‌ம், ந‌ன்மைகளு‌ம் ‌கிடை‌க்‌கி‌ன்றன எ‌‌ன்பதை யாராலு‌ம் மறு‌க்க முடியாது.

உட‌லி‌ன் த‌ட்பவெ‌ப்ப‌நிலையை ‌சீராக வை‌ப்ப‌தி‌லு‌ம் வாழை‌‌ப்பழ‌ம் அ‌திக‌ம் உதவு‌கிறது. வெ‌ப்பமான பகு‌தி‌யி‌ல் வேலை செ‌ய்பவ‌ர்களு‌ம், உட‌ல் சூடு கொ‌ண்டவ‌ர்களு‌ம் வாழை‌ப் பழ‌‌ம் சா‌ப்‌பிடலா‌ம். வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் என்ற பெயரும் உண்டு.

‌ஸ்‌ட்ரெ‌ஸ் என‌ப்படு‌ம் மன அழுத்த நோ‌ய் தா‌க்‌கியவ‌ர்களு‌க்கு வாழைப்பழத்தில் இரு‌க்கு‌ம் பொட்டாசியம் இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் ‌விரை‌வி‌ல் நீங்கும் எ‌ன்பது தெ‌ளிவா‌கிறது.

புகைப்பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தவ‌ர்க‌ள் அதனை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று முடிவெடு‌த்தா‌ல் அத‌ற்கு வாழை‌ப்பழ‌ம் உத‌விகரமாக இரு‌க்கு‌ம். வாழைப்பழத்தில் அ‌திகமாக இரு‌க்கு‌ம் B6, B12, புகைப்பிடிப்பதால் ஏற்படும் ‌நிகோடினை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பத‌ற்கு உதவு‌ம். இதனா‌ல் எ‌ளிதாக புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

காலை‌யி‌ல் ‌சிலரா‌ல் ‌எழு‌ந்‌தி‌ரி‌க்க முடியாம‌ல் அவ‌தி‌ப்படுவா‌ர்க‌‌ள். இதனை காலை தூ‌க்க நோ‌ய் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். இத‌ற்கு அவ‌ர்க‌ள் ஒ‌வ்வொரு உணவு இடைவேளை‌க்கு ஒரு முறை வாழை‌ப் பழ‌த்தை சா‌ப்‌பி‌ட்டா‌ல் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது. எனவே ர‌த்த சோகை இரு‌ப்பவ‌ர்களு‌ம், க‌ர்‌பி‌ணிகளு‌ம் வாழை‌ப் பழ‌த்தை சா‌ப்‌பிடுவது ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

வாழை‌ப் பழ‌த்‌தி‌ல் குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடியுமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

எனவேதா‌ன் அ‌ந்த கால‌த்‌‌திலேயே, வெ‌ற்‌றிலையுடனு‌ம், சா‌மி‌க்கு‌ப் படை‌க்கவு‌ம், தா‌ம்பூல‌ம் வை‌த்து‌க் கொடு‌க்கவு‌ம் இ‌வ்வளவு ‌சிற‌ப்பு வா‌ய்‌ந்த வாழை‌ப் பழ‌த்தை பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளன‌ர். எனவே இ‌ந்த பழ‌த்தை சா‌ப்‌பிடு‌ம்போது பலரு‌க்கு‌ம் ந‌ல்ல பய‌ன் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்ற ‌சி‌‌ந்தனையோடு வாழை‌யி‌ன் பய‌ன்பா‌ட்டை உறு‌தி‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

நாமு‌ம் வாழை‌யி‌ன் பயனை அடைவோ‌ம்.

நீரிழிவு நோய்


நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள குடும்பத்தினர், தங்கள் உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

ஒரு குடும்பத்தினர் நீரிழிவுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தால், அவர்கள் அதே பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் இன்னொரு குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. மீறி திருமணம் செய்தால், அந்த தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பு எளிதில் ஏற்பட்டுவிடும்.

நடுத்தர வயதிற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதை தவிர்த்துவிட வேண்டும். அதற்கான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. அதையும் மீறி உடல் எடை வேகமாக அதிகரித்து வந்தால் உடனே மரு‌த்துவரை அணுகுவது நல்லது.

40 வயதை எ‌ட்டிய ‌பிறகு வருட‌த்‌தி‌ற்கு ஒரு முறை தா‌ங்களாகவே மு‌ன் வ‌ந்து சிறுநீர், ரத்தம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஆரம்பத்திலேயே இந்த நோய் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துவிட்டால், பின்னால் வரக்கூடிய பெரிய பாதிப்பில் இருந்து எளிதில் தப்பிவிடலாம்.

Friday, November 6, 2009

உல‌கிலேய ‌மிக உயரமான க‌ட்டட‌ம்


உல‌கிலேய ‌மிக உயரமான க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்ட க‌ட்டட‌ம் ஐ‌க்‌கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாயில் அமை‌ந்து‌ள்ளது. இதன் உயரம் 2 ஆயிரத்து 600 அடி ஆகும்.


webdunia photoWDபுர்ஜ் துபாய் (துபாய் கோபுரம்) என்ற அந்த கட்டிடம் துபாய் நகரின் மையப்பகுதியில் 500 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு உள்ளது. 100 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தை 3 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டி முடி‌த்து‌ள்ளன‌ர்.

இதை ‌விட உயரமான க‌ட்டட‌ங்க‌ள் க‌ட்டுவத‌ற்கான ‌தி‌ட்ட‌ப் ப‌ணிக‌ள் நட‌ந்து வ‌ந்தாலு‌ம், த‌ற்போதைய ‌நிலை‌யி‌ல் க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌மிக உயரமான க‌ட்டட‌ம் எ‌ன்ற புகழை பு‌‌ர்‌ஜ் து‌பா‌ய் க‌ட்டட‌ம் பெறு‌கிறது.

இ‌ந்த க‌ட்ட‌ட‌த்தை‌க் க‌ட்டியவ‌ர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். இந்த கட்டிடம் வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி ‌திற‌ந்துவை‌க்க‌ப்பட இருந்தது. ‌‌சில மு‌க்‌கிய‌ப் ப‌ணிக‌ள் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது.

துபாயின் மன்னராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டூம் பதவி ஏற்ற 4-வது ஆண்டு தினத்தில் இந்த கட்டிடம் திறக்கப்படுகிறது கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கது.

ஐ‌க்‌கிய அரபு எ‌மிரே‌ட்‌ஸி‌ல் உ‌ள்ள பல மு‌க்‌கிய சு‌ற்றுலா‌த் தள‌ங்க‌ளி‌ல் இதுவு‌ம் ஒ‌ன்றாக இணைய உ‌ள்ளது. இ‌னி து‌பா‌ய் செ‌ல்லு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளு‌க்கு‌ம், அ‌‌ப்பகு‌தி‌யி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் வெ‌ளிநா‌ட்டினரு‌க்கு‌ம் கூட இ‌ந்த பு‌ர்‌ஜ் துபா‌ய் ‌சிற‌ந்த சு‌ற்றுலா‌த் தளமாக ‌விள‌ங்கு‌ம் எ‌ன்பதை மறு‌ப்பத‌ற்‌கி‌ல்லை.

உல‌கிலேயே ‌மிக உயரமான க‌ட்டட‌ம் எ‌ன்றது‌ம், ஒரு சாதாரண ‌விஷயமாக நா‌ம் கரு‌தி‌விட முடியாது.

100வது மாடி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் ‌லி‌ப்‌ட் சேவை, நகரு‌ம் படிக‌ட்டு‌ள், குடி‌நீ‌ர் சேவை போ‌ன்றவ‌ற்றை நா‌ம் யோ‌சி‌த்தா‌ல்தா‌ன் ச‌ற்று ‌விள‌ங்கு‌ம் இத‌ன் சாதனை.

அதாவது, இ‌ந்த க‌ட்ட‌டம் முழு‌மை‌க்கு‌ம் ஒரு ‌நி‌மி‌ட‌த்‌தி‌ற்கு 10,000 ட‌ன் கு‌ளி‌ர் கா‌ற்று அனு‌ப்ப‌ப்பட வே‌ண்டு‌ம். ஒரு நா‌ள் முழும‌ை‌க்கு‌ம், இ‌ந்த க‌ட்டட‌த்‌தி‌ன் அனை‌த்து மாடிகளு‌க்கு‌ம் செ‌ல்லு‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு எ‌வ்வளவு‌த் தெ‌ரியுமா? 9,46,000 ‌லி‌ட்ட‌ர்.

இ‌ங்கு இர‌ண்டு ‌லி‌ப்‌ட் வச‌திக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ஒ‌வ்வொ‌ன்று‌ம் 21 நப‌ர்க‌ள் செ‌ல்லு‌ம் வகை‌யி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த ‌‌லி‌ப்டுக‌ள் ஒரு நொடி‌க்கு 18 ‌மீ‌ட்ட‌ர் தூ‌ர‌ம் செ‌ல்லு‌ம் வகை‌யி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. உல‌கிலேயே ‌மிக உயர‌த்‌தி‌ற்கு அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌லி‌ப்‌ட் வச‌தி இதுவாக‌த்தா‌ன் உ‌ள்ளது.

இ‌தி‌ல் பல ‌உணவக‌ங்களு‌ம், ஷா‌ப்‌பி‌ங் மா‌ல்களு‌ம், ‌நிறுவன‌ங்களு‌ம், ஹோ‌ட்ட‌ல்களு‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இ‌ந்த க‌ட்டட‌ம் ‌திற‌ந்த ‌‌பிறகு, துபா‌யி‌ல் ம‌ட்டும‌ல்லாம‌ல், ஐ‌க்‌கிய அரபு எ‌மிரே‌‌ட்டி‌‌ன் ச‌ரி‌ந்து‌ள்ள பொருளாதார‌ம் உய‌ர்வை நோ‌க்‌கி‌ச் செ‌ல்லு‌‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.